சனி, 26 மே, 2012

காரணம் கூறிவிடு...

எனக்கு பிடித்த அந்த நிலவும்
உனக்கு பிடித்திருக்கிறது
எனக்கு பிடித்த  என்
கவிதையின் வரிகளும்
உனக்கு பிடித்திருக்கிறது
அதனாலோ என்னவோ - உன்னை
எனக்கு
அதிகமாவே பிடித்திருக்கிறது...
ஆனால்
என்னைமட்டும்  ஏன் உனக்கு
இதுநாள்வரை பிடிக்கவில்லை
காரணம் கூறிவிடு
முடியும் என்றால் முயற்சி செய்கிறேன் - உயிரே
உன்னில் இடம்பிடிக்க...
முடியாது என்றால்..,
முந்தி விடுகிறேன்
வானில் இடம்பிடிக்க...

வெள்ளி, 25 மே, 2012

பல் வரிசை ...

மலர்ந்த 
செந்தாமரை முகத்தில்
மலராத
மல்லிகை மொட்டுக்களின் வரிசை
உன் பற்கள்...

வியாழன், 24 மே, 2012

அட போங்கப்பா


உதாசினப்படுத்தி போனதால்

உறுப்புகள் ஒவ்வொன்றும் உணர்சிகலற்று போனது
உயிர் இருந்தும் உடல் பிணமாக உலவுகிறது
உயிரே 
நி
என் உணர்வுகளை
உதாசினப்படுத்தி போனதால்...

புதன், 23 மே, 2012

கருவறை

கடவுளின் கருவறையில் 
கற்பூரம் ஏற்றி என்னபயன்...?
அங்கு 
நி இருந்த கருவறையில் 
தீ பற்றி எரிந்துக் கொண்டிருக்கையில்...

செவ்வாய், 22 மே, 2012

நிலவு

கொடுத்துவைத்தவன் நீ
என்ன இருக்கிறது உனக்குள்
 அவளைவிட ..?


என்னவோ
எனக்கும் பிடித்திருக்கிறது
உன்னை....
அவளுக்கே  உன்னை பிடிப்பதால்...